14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநர்… காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பி ஏமாந்துபோன பரிதாபம்..!!

Author: Babu Lakshmanan
13 April 2022, 12:27 pm

கோவையில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனரை போக்சோவில் போலீசார்கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது அவர் 6 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, கோவையை சேர்ந்த பொன்னுசாமி (23) என்ற ஆட்டோ ஓட்டுநர் சிறுமியை காதலிப்பதாக கூறி பழகியதாகவும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பொன்னுச்சாமி, சிறுமியை தனது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பொன்னுசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • question arises on falling of ajith cut out in tirunelveli உரிய அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட கட் அவுட்? அஜித் கட் அவுட்டால் எழுந்த சர்ச்சை!
  • Close menu