கோவையில் ஆட்டோ ஓட்டுநர் மரணத்தில் திடீர் திருப்பம் : கொலை செய்த இளைஞர் கைது.. விசாரணையில் பகீர் வாக்குமூலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2022, 8:56 pm

கோவை : கோவையில் ஆட்டோ டிரைவரை கல்லால் தாக்கி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் செங்குளம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் இறந்துகிடந்தார். அவரது உடலை மீட்டு குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் இறந்து கிடந்தது நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வாசு என்பதும் அவர் ஆட்டோ டிரைவர் என்பதும் தெரியவந்தது. போலீசார் வாசுவை கொலை செய்தது யார் என்று குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர். அப்போது டவுன்ஹால் பகுதியில் சுற்றித் பிரிந்த முகமது ரியாசை மடக்கி பிடித்தனர்.

குடிபோதையில் இருவரும் மாறி மாறி தகராறில் ஈடுபட்ட போது முகமது ரியாஸ் வாசுவை கல்லால் தாக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!