சாலையில் சரியாக மூடப்படாத பள்ளம்… கார் மீது மோதி தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகனம்.. அலட்சியத்தால் நடந்த விபத்து!!

Author: Babu Lakshmanan
22 December 2023, 5:09 pm

கோவையில் மோசமான நிலையில் உள்ள சாலையில் சரியாக மூடப்படாத பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்த வாகன ஓட்டிகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. குறிப்பாக, பேருந்து நிறுத்தம் அருகில் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதாகவும், உடனடியாக அதனை சரி செய்ய வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் பலமுறை நெடுஞ்சாலைத் துறையினரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை சுமார் 7 மணியளவில் அப்பகுதியில் சென்ற கார் ஓட்டுநர் குழியை பார்த்து காரின் வேகத்தை குறைத்துள்ளார். அப்போது, காரின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், நிலை தடுமாறி காரின் பின்புறம் இடித்து கீழே விழுந்தனர்.

இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டனர். இந்த விபத்தில், இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால் உடனடியாக நெடுஞ்சாலை துறையினர் சாலை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ