கனமழையால் 15,000 வாழை மரங்கள் நாசம்.. கண்ணீர் விடும் கோவை விவசாயிகள் ; நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை

Author: Babu Lakshmanan
1 April 2023, 9:01 am

கோவை: நேற்று பெய்த கன மழையில் 15000 வாழை மரங்கள் சேதமடைந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்கா பகுதிகளில் தானிய வகைகள், தென்னை, வாழை உள்ளிட்ட விளைபொருட்களின் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள பெட்டையாண்டிபுரம் சாந்தலிங்கம் என்பவரின் தனியார் தோட்டத்தில் 2000 வாழை மரங்கள் கனமழையால் சேதமடைந்துள்ளது. பாலக்காட்டு கணவாய் உள்ளதால் இப்பகுதிகளில் வருடத்தில் இருமழை பொழியும்.

எனவே, விவசாயிகள் விவசாயம் செய்ய தோட்டத்து பத்திரம், வீடு பத்திரங்களை வங்கிகளில் அடமானம் வைத்து சொட்டுநீர்பாசன முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.

கல்குவாரிகள் அதிகம் என்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. நேற்று தீடீர் சூரை காற்றுடன் பெய்த கனமழையால் கிணத்துக்கடவு சுற்றுவட்டார விவசாய நிலங்களில் இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான 15,000 வாழைமரங்கள் கன மழையால் சேதம் அடைந்தது.

தற்போது, சட்டமன்ற கூட்டதொடர் நடைபெற்று வருவதால் தமிழக முதல்வர் விவசாயிகள் நலன் கருதி பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!