வாகன ஓட்டிகளே உஷார்… ஆபிஸ் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டூவிலர் அபேஸ்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
13 May 2022, 12:45 pm

கோவையில் அலுவலகம் முன்பு நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கோவை நல்லாம்பாளயம் பகுதியில் அமைந்துள்ள, கல்பனா டிரேடர்ஸ் நிறுவன உரிமையாளர் கணேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை, அவரது நிறுவனத்தின் வாயிலில் நிறுத்தியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதை தொடர்ந்து அலுவலகத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்ததில் அந்த வழியாக வந்த மர்ம நபர், மதியம் சுமார் 1.40 மணியவில் இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடி சென்றுள்ளார். இது அங்கிருந்த CCTV யில் பதிவாகி உள்ளது.

அலுவலகம் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்ததை பார்த்து அதிர்சியடைந்த அவர், அந்த காட்சிகளை தற்பொழுது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். தற்பொழுது அந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 1111

    0

    0