கோவையில் சட்டவிரோதமாக லாட்டரி விற்ற பா.ஜ.க. நிர்வாகி கைது : 10 கேரள லாட்டரிகள் பறிமுதல்!!

Author: Babu Lakshmanan
11 November 2022, 12:34 pm

கோவை : கோவையில் சட்டவிரோதமாக கேரள லாட்டரியை விற்பனை செய்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், காந்திபுரம் ராம் நகர் பகுதியில் உள்ள திரையரங்கு அருகே காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அங்கு ஒருவர் கேரளா லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த சபரி என்பதும், இவர் கோவை பா.ஜ.க மாவட்ட இளைஞர் அணி செயலாளர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 கேரளா லாட்டரி சீட்டு பறிமுதல் செய்தனர்.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 486

    0

    0