அரசு அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டிய விவகாரம் : கோவையில் பாஜக பிரமுகரை கைது செய்தது போலீஸ்..!!

Author: Babu Lakshmanan
24 January 2022, 11:02 am

கோவை : கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டிய பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

கோவை அடுத்துள்ள பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்த பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையிலான பாஜகவினர், அலுவலகத்திற்குள் புகுந்து பிரதமர் மோடியின் படத்தை மாட்டினர். இதனைப் பார்த்த பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் அனுமதியின்றி அலுவலகத்திற்கு வந்து புகைப்படம் மாற்றுவது தவறு எனவும், மாஸ்க் அணியாமல் அலுவலகத்திற்குள் வரக்கூடாது எனவும் சுட்டிக்காட்டினர். இதனால் பாஜகவினருக்கு அலுவலக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் படம் வைக்க வேண்டும் எனவும், மோடியின் புகைப்படத்தை கழற்றினால் அதற்கு திமுக தான் காரணம் எனவும், புகைப்படத்தை கழற்றினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பாஜகவினர் கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

இதையடுத்து, அரசு அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில், பாஜக அமைப்பு சாரா அணி மாவட்டச் செயலாளர் பாஸ்கரனை போலீசார் கைது செய்தனர். மேலும், அத்துமீறி நுழைதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • ஓடிடி-யில் வெளியாகும் தீபாவளி மாஸ் ஹிட் படம்…அட எப்போங்க..!
  • Views: - 6152

    0

    0