முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு… பாஜக பெண் பிரமுகர் கோவையில் கைது.. பாஜகவினர் கடும் கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
20 June 2023, 12:49 pm

கோவை ; பெரியார், கருணாநிதி, ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய பாஜக பெண் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.

சமூக வலைதள பக்கங்களில் பாஜக விற்கு ஆதரவாகவும் பெரியார், கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட கோவையை சேர்ந்த பாஜக பெண் ஆதரவாளர் உமாகார்கி என்பவர் தற்போது கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு நேற்றை தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சிறந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் விருதை வழங்கிய நிலையில், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், உமா கார்க்கி, நடிகர் விஜய் மாணவர்களிடையே உரையாற்றிய நிகழ்ச்சியின் போது, பெரியார் ஆகியோரை பற்றி படியுங்கள் எனக் கூறியதற்கும், விஜய் குறித்து அவதூறான கருத்தை இவர் பதிவிட்டிருந்தார்.

உமா கார்க்கி வேறொரு வழக்கிற்காக சென்னை எழும்பூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நாளை விசாரணைக்காக ஆஜராக இருந்த நிலையில், இன்று கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பதிவிற்கு பல்வேறு எதிர்ப்புகளும், புகார்களும் எழுந்து வந்த நிலையில், இந்த கைது நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இவரிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உமா கார்கி கைது செய்யப்பட்டதற்கு பாஜகவினர் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 414

    0

    0