உளவுத்துறை கவனிக்கலைனா கோவையில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழும் : காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2022, 7:17 pm

தனியார் நிறுவனங்கள் நிர்வாகத்தை சிறந்த முறையில் செயல்படுத்துகிறது என இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.

கோவை காட்டூர் பகுதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் 28ம் தேதி திருச்செந்தூரில் இந்து உரிமை பிரச்சார பயணம் தொடங்க இருப்பதாகவும் ஜூலை 31 ஆம் தேதி சென்னையில் முடிவடைவதாகவும் தெரிவித்தார்.

மேலும் முத்தண்ணன் குளம் பகுதியில் இருந்த கோவிலை இடித்து வேறு இடம் தருவதாக கூறிய நிலையில் இன்றும் ஒதுக்கவில்லை எனவும் தெரிவித்தார். கோவை குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பலரையும் கைது செய்யாமல் தேடிவருவதாக கூறி வருகிறார்கள் என்றார்.

மேலும் உக்கடம் லாரிபேட்டை பகுதியில் பயங்கரவாதிகள் ரகசியமாக இயக்கத்தை துவைக்கியுள்ளார்கள் என கூறிய அவர் கோவையில் மிகபெரிய கலவரம் நடப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சந்தேகப்படுகிறோம் என தெரிவித்தார்.

இங்கு உள்ள உளவுத்துறை அதனை கவனிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் கோவையில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு நடக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார். தொண்டாமுத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்தவர்களை பெண்கள் பிடித்து கொடுத்தும் போலிசார் முறையாக விசாரிக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும் அக்னிபத் திட்டம் நல்ல திட்டமாக கருதுகிறேன் என்றும் சிறந்த பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இதனை வரவேற்பதாகவும் தெரிவித்தார். மேலும் திமுகவின் ஓராண்டு சாதனை என்பது கோவில்களை இடிப்பதும், மடாதிபதிகளை மிரட்டுவதும்தான் எனவும் தெரிவித்தார்.

பள்ளி வாசல்களுக்கு கஞ்சிக்கு அரிசி கொடுப்பது போன்று, ஆடிமாத கூழ் ஊற்றுவதற்க்கும் அரசு நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் சிதம்பரத்தில் தீட்சிதர்களை மிரட்டும் செயலை இந்துமுன்னனி கண்டிக்கிறது என தெரிவித்தார்.

மேலும் இந்து கோவில்களுக்கு வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அதிமுக வை பொறுத்தவரை அது அவர்களது கட்சி பிரச்சனை என்றும் நீண்ட காலமாக சமாதானம் பேசினாலும் ஒற்றுமை இல்லாமல் இருப்பதாகவும், இரட்டை தலைமை என்றால் அப்படித்தான் இருக்கும் ஏதேனும் ஒரு தலைமை விட்டுக் கொடுத்து தான் போக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தனியார் நிறுவனங்கள் நல்ல முறையில் அனைத்தையும் செய்வதாகவும் போக்குவரத்து துறையை பொருத்தவரை அரசுக்கு பல்வேறு நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தனியார் நல்முறையில் நடத்துவதில் தவறில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் சீரடிக்கு தனியார் ரயில் சேவை போல் இன்னும் வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் மாவட்ட ஆட்சியரை அவரது குழந்தைகளை தனியார் பள்ளியில் தானே சேர்க்கிறார்கள் எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் தனியாரிடம் இருப்பதால் தான் சிறப்பாக உள்ளதாகவும் அதனால் தான் பாஜக அதை(தனியாரிடம் ஒப்படைப்பு) செய்வதாக நான் கருதுகிறேன் என தெரிவித்தார்.

  • Viduthalai 2 box office collection தினம் தினமும் இனி வேட்டை தான் …விடுதலை 2 முதல் நாள் வசூலை பாருங்க..!
  • Views: - 661

    0

    0