காரால் அடித்து தூக்கியதில் கால்கள் உடைந்த பெண்… சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பு ; தப்பியோடிய வடமாநில தொழிலதிபர்!
வடகோவை சிந்தாமணி பகுதியில் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேல்முருகன் இவரது மனைவி லீலாவதி. இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை லீலாவதி வழக்கம்போல் வேலைக்காக தனது வீட்டில் இருந்து பூ மார்க்கெட் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
கென்னடி திரையரங்கு அருகே நடந்து சென்ற போது பின்னால் அதி வேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதி, பின்னர் லீலாவதி மீது மோதியது. இதில் லீலாவதி சுமார் 50 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தை ஏற்படுத்தியவர் வட மாநிலத்தைச் சேர்ந்த உத்தம்குமார் என்பதும் அதிவேகமாக வந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து வெரைட்டி ஹால் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மேட்டுப்பாளையம் சாலையில் அதி வேகமாக வரும் கார் இருசக்கர வாகனம் மற்றும் லீலாவதி மீது மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட லீலாவதிக்கு வலது கால் முறிவு ஏற்பட்டதுடன், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவி இழந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, கார் விபத்தை ஏற்படுத்திய வட மாநில தொழில் அதிபரான உத்தம் குமார் என்பவர் ஆர். எஸ்.புரத்தில் வசிப்பதாகவும், அவரது ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி 2 ஆண்டுகளானதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய போது, விபத்தால் பாதிக்கப்பட்ட லீலாவதிக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளை செய்து தருவதாக கூறி கெஞ்சியுள்ளார். ஆனால், போலீசார் தரப்பில் உத்தம் குமாருக்கு ராஜ மரியாதை கொடுப்பதாகவும், அவரது சிகிச்சைக்கு உதவுவதாக கூறிய தொழில் அதிபர் உத்தம் குமாரும் , போலீசார் ஆதரவு இருப்பதால்,ஏமாற்றி விட்டதாகவும் தற்போது சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பதாகவும் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
This website uses cookies.