கோவை கார் வெடிப்பு சம்பவம் ; கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நவ.,8 வரை சிறை தண்டனை… ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவு!!
Author: Babu Lakshmanan26 October 2022, 9:09 am
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நவம்பர் 8ம் தேதி வரை ரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி செந்தில் ராஜா உத்தரவிட்டுள்ளார்.
கோவை ஈஸ்வரன் கோயில் வீதியில் கார் வெடித்து ஜமேஷா முபீன் என்ற நபர் பலியானார். தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் நடந்த இந்த சம்பவம் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. பலியான ஜமேஷா முபீன் தற்செயலான விபத்தில் இறந்தாரா..? அல்லது சதி வேலைக்கு முயன்ற நிலையில் இறந்தாரா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜமேஷா முபீன் பயணித்த காரில் ஆணி, பால்ஸ் குண்டுகள், இரண்டு சிலிண்டர் தடயங்கள் கிடைக்கப்பெற்றன. மேலும், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவையான வேதியியல் மூலப்பொருட்கள் அவரது இல்லத்திலும் கைப்பற்றப்பட்டன. இதனால், சதி செயலுக்காக முயன்றாரா..? என்ற சந்தேகம் போலீஸாருக்கு சந்தேகம் வழுத்தன.
இதனிடையே, ஜமேஷா முபீன் இல்லத்தில் இருந்து மர்ம பொருட்களை அவரது கூட்டாளிகள் எடுத்துச் சென்ற சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனடிப்படையில், உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23) ஜி.எம்.நகர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனை அடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோவை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜெ. எம்.2″ல் நீதிபதி செந்தில் ராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். விசாரணக்குப் பிறகு 5 பேரை நவம்பர் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.