கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் ; 5 பேரை காவலில் எடுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் : கோவையில் மீண்டும் விசாரணை!!

Author: Babu Lakshmanan
10 March 2023, 11:24 am

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரை கோவைக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு கோவையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இதில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அவ்வப்போது கைது செய்யப்பட்டவர்களை கோவைக்கு அழைத்து வந்து, அவர்கள் குடியிருந்த பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் உயிரிழந்த ஜமீஷா முபினின் மனைவியிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகமது அசாருதீன், பெரோஸ், நவாஸ் இஸ்மாயில், உமர் ஃபரூக், பெரோஸ்கான் ஆகிய ஐந்து பேரை சென்னை சிறையில் இருந்து NIA அதிகாரிகள் காவலில் எடுத்து கோவைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏழு நாட்கள் காவலில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

  • Ajith Vidamuyarchi Trailer Release Update விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!