பரபரப்பை கிளப்பிய கோவை கார் வெடிப்பு வழக்கு : விசாரணை வளையத்தில் சிக்கிய திருச்சியை சேர்ந்த நபர்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2022, 3:37 pm

கோவை குண்டுவெடிப்பு திருச்சி நபரிடம் செல்போன் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கடந்த மாதம் 23ஆம் தேதி சிலிண்டர் கார் வெடித்தது தொடர்பாக தமிழக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு 6 நபர்களை கைது செய்தனர்.

தொடர்ந்து அந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உள்ள வயர்லெஸ் ரோடு, ஸ்டார் நகரில் அப்துல் முத்தலிப் என்பவருடைய வீட்டில் திருச்சி கே.கே.நகர் சரக குற்றப்பிரிவு துணை ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

ஆனால் சோதனையில் எந்தவிதமான ஆவணங்களோ கைப்பற்றப்படவில்லை அவரது செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்து சென்றனர்.

ஏற்கனவே அப்துல் லத்திபிடம் NiA அதிகாரிகள் விசாரணை செய்தது குறிப்பிடத்தக்கது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?