பொள்ளாச்சி சாலையில் சென்ற கார் திடீர் தீப்பிடித்து விபத்து… கொழுந்து விட்டெரிந்த தீயால் எலும்புக் கூடான கார்… கோவையில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
10 July 2023, 2:06 pm

கோவை ; பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து ஜவுளி எடுப்பதற்காக கோவை நோக்கி வந்த கார், ஈச்சனாரி அருகே வந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்த பெண் உட்பட நான்கு பேர் ஜவுளி எடுப்பதற்காக கோவை நோக்கி டெஸ்டர் காரில் வந்துள்ளார். அப்போது, ஈச்சனாரி மேம்பாலம் அருகே வந்த போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வரத்துவங்கியுள்ளது.

இதனால், துதாரித்துக் கொண்ட ஓட்டுநர் காரை ஓரத்தில் நிறுத்திவிட்டு உள்ளே இருந்த அனைவரும் கீழே இறங்கினர். இதையடுத்து காரின் முன் பகுதியில் தீப்பிடித்து எரியத்துவங்கியதால், அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கார் தீயில் எரிந்து மிற்றிலும் நாசமானது. இச்சம்பவம் தொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • producer lose his money because of suriya film எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?