சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபரிடம் செல்போன் பறிப்பு : பைக்கில் பறந்த திருடர்களை மடக்கி பிடிக்க முயன்ற பரபரப்பு சிசிடிவி காட்சிகள்…!!

Author: Babu Lakshmanan
9 April 2022, 4:45 pm

கோவை : நடந்து சென்று கொண்டிருந்த வாலிபரிடம் செல்போனை பறித்துச் சென்ற திருடர்களின் வாகனத்தை மடக்கி பிடிக்க முயற்சிக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியது.

கோவை மாவட்டம் தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதி பூம்புகார் நகரில் இன்று காலை வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் வாலிபரின் கையில் இருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

இரு சக்கர வாகனம் சென்று விட குறுக்கு சந்தில் ஓடி வந்த வாலிபர் இரு சக்கர வாகனத்தை மடக்கி பிடிக்க முயன்றுள்ளார். எனினும், அந்த இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் நிலை தடுமாறியும் தப்பி சென்றனர். இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது இரு சக்கர வாகனத்தில் வந்து செல்போனை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Baby John box office performanceசும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த அட்லீ…வசூலில் திணறும் பேபி ஜான்…!
  • Views: - 2211

    0

    0