‘சிறையையே தகர்த்திடுவேன்’… ஜெயிலரை மிரட்டிய உபா சட்டத்தில் கைதான கைதி.. கோவை மத்திய சிறையில் ஐஎஸ்ஐஎஸ் கொடி பறிமுதல்…!

Author: Babu Lakshmanan
15 December 2023, 12:01 pm

கோவை மத்திய சிறையில் உபா சட்டத்தில் கைதான கைதியிடம் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் மணியக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்த அசீஃப் என்பவர் உபா (UAPA) சட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு முன்னர் இந்து தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டு இருக்கின்றார். இவர் கடந்த ஒன்றை ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நிலையில், காவலர்களை மிரட்டியதாக இவர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, வழக்கு நடைபெற்று வருகின்றன.

ஜெயில் காவலர்கள் வழக்கம்போல சோதனை நடத்திய பொழுது, இவரிடம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கொடி வரைந்திருந்த பேப்பர் கண்டுபிடிக்கப்பட்டது. சிறை கைதிகளுக்கு பெட்டிசன் எழுதுவதற்காக தரப்படும் பேப்பர் மட்டும் எழுதுகோலை பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொடி வரைந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நிலையில், பந்தைய சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசாமா பின்லேடன் ஆதரவாளரான இவர், அல்கொய்தா இயக்கத்தில் மீது பற்று கொண்டவர் என்று தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, ஜெயிலர் மற்றும் சிறைக்காவலர்களை மிரட்டியதுடன், சிறையையும் தகர்ப்பேன் என மிரட்டல் விடுத்ததால், அவர் மீண்டும் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 614

    0

    0