கோவை சிறை வளாகத்திலேயே சந்தன மரம் திருட்டு… போலீஸில் புகார் அளித்த ஜெயிலர்… கோவையில் பரபரப்பு

Author: Babu Lakshmanan
15 November 2022, 5:06 pm

கோவையில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் சந்தன மரம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நகரில் மத்திய பகுதியில் சிறைச் சாலை அமைந்து உள்ளது. இங்கு ஆயிரக் கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும், சிறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு அதே வளாகத்தில் அமைந்து உள்ளது.

இந்த நிலையில், கோவை மத்திய சிறைச் சாலையின் ஜெய்லர் சிவராஜன் போலீசார் உடன் கண்காணிப்பு பணியில் சிறை வளாகத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அங்கு இருந்த சந்தன மரம் ஒன்று அறுத்து எடுத்து செல்லப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து அவர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!