கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணி தடை விதித்த விவகாரம் : கோவையில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!
Author: Babu Lakshmanan17 March 2022, 2:47 pm
கோவை : கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்ற கா்நாடக உயா்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கல்வி கூடங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் அந்த தீர்ப்பை கண்டித்து கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை நிராகரிக்கிறோம், கர்நாடக உயர்நீதிமன்றமே காவிகளுக்கு அடிபணியாதே, முஸ்லீம் விரோத போக்கோடு செயல்படாதே, ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை என்ற பதாகைகளை ஏந்தி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை கண்டித்தும் கர்நாடக உயர்நீதிமன்றத்தை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.