பூப்படைந்த பட்டியலின மாணவிக்கு தனியார் பள்ளியில் அரங்கேறிய அவலம்.. அதிர்ச்சி வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2025, 1:36 pm

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது.

தற்பொழுது தமிழகம் முழுவதும் அழைத்துப் பள்ளிகளும் முழு ஆண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டு உள்ளது. அந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சுருதிகா ஸ்ரீ கடந்த ஐந்தாம் தேதி அன்று வயதுக்கு வந்து விட்டதாக தெரிகிறது.

இதையும் படியுங்க: கோவைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… ஜெயிலர் 2 குறித்து முக்கிய அப்டேட்!

முழு ஆண்டு தேர்வு நடப்பதால் தேர்வு எழுத அந்த பள்ளிக்குச் சென்று உள்ளார்.இந்நிலையில் கடந்த 7 ம் தேதி அறிவியல் தேர்வு 9 ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகளை நடைபெற்ற போது அந்த மாணவியை தேர்வு மையத்தில் அனுமதிக்காமல் பள்ளி வகுப்பறை முன்பு உள்ள படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்து உள்ளனர்.

இந்நிலையில் மாணவியை பார்ப்பதற்காக அங்கு வந்த அவரது தாய் மற்றும் உறவினர் ஒருவர் சென்று உள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்த மாணவியிடம் இங்கு ஏன் அமர்ந்து தேர்வு எழுதுகிறாய் ? வகுப்பறைக்குச் சென்று எழுதவில்லையா என்று கேள்வி கேட்டனர். அந்த மாணவி பதில் பேச முடியாமல் செய்வதறியாது இருந்துள்ளார்.

coimbatore complaint against private school for cruelty to a student

அதனை உறவினர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார்.இதுகுறித்து பதறி துடித்து அந்த தாய் அங்கு இருந்த ஆசிரியர்களிடம் கேட்கும் போது இங்கு அப்படித் தான் நடக்கும், என நீ வேணும்னா, வேறு பள்ளியில் சேர்த்துக் கொள் என ஆசிரியர்கள் திமிரோடு பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

கல்வித் துறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியினர், அந்த வீடியோக்களை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கையும் விடுத்து உள்ளனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Leave a Reply