‘நீ போய் பு***து’… வார்டை தூய்மையாக வைக்கக்கோரிய இளைஞரை தாக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் ; அதிர்ச்சி வீடியோ
Author: Babu Lakshmanan31 May 2024, 8:58 am
கோவை – மேட்டுப்பாளையம் குப்பைகளை நீக்கி வார்டை தூய்மையாக வைக்கக்கோரிய இளைஞரை காங்கிரஸ் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் 23வது வார்டு ரயில்வே காலணி பகுதியில் கடந்த 5″மாதங்களாக தூய்மை பணிகளை மேற்கொள்ளாததால் அந்த பகுதி முழுவதும் குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் ஒருவர் அந்த பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாகவும் தெரிய வருகிறது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் கவுதம் என்பவர் அந்த பகுதியைச் சேர்ந்த 23வது வார்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் கவிதா புருஷோத்தமனிடம் புகாரளித்துள்ளார்.
மேலும் படிக்க: பாலியல் வழக்கு… விமான நிலையம் வந்திறங்கியவுடன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு விலங்கு மாட்டிய போலீஸ்!!
அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காததால் மேட்டுப்பாளையம் நகராட்சியில் இது குறித்து இளைஞர் கவுதம் புகாரளித்த நிலையில், இன்று அந்த பகுதியில் தூய்மை பணிகளுக்காக துப்புறவு தொழிலாளிகள் வந்துள்ளனர்.
இதனை அறிந்து கோபமடைந்த காங்கிரஸ் 23வது வார்டு கவுன்சிலர் கவிதா, அவரது கணவர் புருசோத்தமன் மற்றும் அவரது மகன் ஆகியோர் தூய்மை பணிகளை மேற்கொள்ள வந்த துப்புரவு பணியாளர்களை இங்கு தூய்மை பணிகள் செய்யவேண்டாம் என்று தெரிவித்ததுடன், கவுதமை கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதில் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.