காங்கிரஸ் அலுவலகம் மீது மனித மலத்தை வீசி தாக்குதல் ; அதிமுக பிரமுகர் வீட்டிலும் வீச்சு ; கோவையில் அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
25 November 2023, 7:21 pm

கோவை இருகூர் சுங்கம் மைதானத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மனித மலத்தை தண்ணீரில் கலந்து வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்காநல்லூர் பகுதியில் கழிவறை சுத்தம் செய்யும் ஒப்பந்ததாரர்கள் முறையாக கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிகளை செய்யவில்லை என காங்கிரஸ் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார்.

ராதாகிருஷ்ணன், பிரகாஷ் ஆகியோருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அதிமுக கிளை செயலாளர் பன்னீர்செல்வம் கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், அதிமுக கிளை செயலாளர் பன்னீர் செல்வம் வீட்டிலும், இருகூர் சுங்கம் மைதானத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திலும் மனித மலத்தை வீசியுள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் மற்றும் அதிமுக பிரமுகர்கள் அளித்த புகாரின் பேரில் ஒப்பந்ததாரர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அதிமுக பிரமுகர் மற்றும் காங்கிரஸ் அலுவலகத்தில் மலத்தை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • SAWADEEKA song meaning அட”SAWADEEKA”அர்த்தம் இதுதானா…பங்கம் செய்துள்ள அனிருத்…செம VIBE-ல் அஜித் ரசிகர்கள்..!
  • Views: - 322

    0

    0