கோவையில் அதிர்ச்சி… நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனாவுக்கு ஒருவர் பலி ; மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

Author: Babu Lakshmanan
3 January 2024, 12:04 pm

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த முதியவர் கொரொனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவையை சேர்ந்த 74வயது முதியவர் தனியார் மருத்துவமனையில் காய்ச்சல், சுவாச பிரச்சனை, காரணமாக கடந்த ஆறு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று இருந்தது உறுதியானதாகவும், இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கோவையில் கொரோனாவால் பாதிப்புக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2621 ஆக உயர்ந்துள்ளது.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!