கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசின் விருது.. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விருது வழங்கி கவுரவிப்பு..!!

Author: Babu Lakshmanan
25 August 2023, 7:33 pm

இந்திய ஸ்மார்ட் சிட்டி விருது 2022-ல் சுற்றுச்சூழல் கட்டமைப்பு பிரிவில் கோவை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.

‘ஸ்மார்ட் சிட்டி’ எனப்படும் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களை தேர்வு செய்துள்ள மத்திய அரசு, வருடத்திற்கு ரூ.200 கோடி வீதம், ஐந்து வருடங்களுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அந்த நகரங்களின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது.

இதில், சிறந்த கட்டமைப்பு, சிறந்த நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் ஆண்டுதோறும் விருதுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஸ்மார்ட் சிட்டி விருது 2022-ல் சுற்றுச்சூழல் கட்டமைப்பு பிரிவில் கோவை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.

மாதிரி சாலை மறுசீரமைப்புக்காக முதலிடம் பிடித்ததாக மத்திய அமைச்சகத்தின் நகர்புற வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. இது கோவை மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Dhruv Vikram Love Success actress is becoming Vikram's daughter-in-law வயசு மட்டும் இடிக்குது… விக்ரமின் மருமகளாகிறார் அந்த நடிகை.?!!