“யாருக்கும் உதவாத கோவை மாநகராட்சி பட்ஜெட்”: அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!!
Author: Rajesh30 March 2022, 12:55 pm
கோவை: கோவை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று கூறி அதிமுக கவுன்சிலர்கள் 3 பேர் பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
கோவை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் கல்பனா இன்று தாக்கல் செய்தார். இதில் திமுக., அதிமுக., காங்கிர்ஸ் உள்ளிட்ட காட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டர்.
அப்போது பட்ஜெட்டில் எந்த புதிய அறிவிப்பும் இல்லை என்று கூறி அதிமுக கவுன்சிலர்கள் 3 பேர் வெளி நடப்பு செய்தனர்.
தொடர்ந்து அதிமுக.,வை சேர்ந்த 47வது மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தீண்டாமை ஒழிப்பே தவறாக படிக்கிறார். மாநகராட்சியில் எந்த புதிய திட்டங்களும் இல்லை.கோவைக்கு திட்டங்கள் வரும் எதிர்பார்த்து வந்தோம்.
தொழில் துறை, பொதுமக்கள் என அனைத்து துறைக்கும் உதவாத பட்ஜெட்டாக உள்ளது. பெருங்காய டப்பாவில் வாசம் மட்டும் தான் வரும் என்பது போல் உள்ளது. எனவே இந்த பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம்.
என்று கூறினார்.
0
0