‘வணக்கங்க-க்கு பதிலாக வணக்கமுங்க’ சூப்பர்… கோவை மாநகராட்சி ஆணையாளர் ட்விட்டுக்கு பொதுமக்கள் கருத்து

Author: Babu Lakshmanan
1 May 2023, 11:44 am

“வணக்கங்க COIMBATORE ” செல்பி பாண்ட் என்பதற்கு பதிலாக “வணக்கமுங்க” என வைத்திருக்கலாம் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் ட்விட்டுக்கு பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் பல்வேறு குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீர் செய்யப்பட்டு அழகுப்படுத்த வருகின்றன. கோவை உக்கடம் பெரிய குளத்தில் வைக்கப்பட்டுள்ள I LOVE KOVAI பொதுமக்களின் முக்கிய செல்பி பாயிண்ட் ஆக உள்ளது.
இந்நிலையில் தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளக்கரையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீர் செய்யப்பட்டு வருகிறது.

விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. மேலும் இங்கு “வணக்கங்க COIMBATORE” என்ற செல்பி பாயிண்ட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அவரது ட்விட்டர் பக்கத்தில் “New Selfie Point in Coimbatore” என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த ட்விட்க்கு பொதுமக்கள் பலரும் “வணக்கங்க COIMBATORE” என்பதற்கு பதிலாக கொங்கு தமிழிலில் பேசும் போது குறிப்பிடப்படுவது போல் “வணக்கமுங்க COIMBATORE ” என வைத்திருக்கலாம் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 513

    0

    0