இது என்னடா புது மாடலான Toilet… 2 பேர் ஒரே அறையிலா..? சர்ச்சையை கிளப்பிய கோவை மாநகராட்சி கழிவறை..!!

Author: Babu Lakshmanan
7 September 2022, 6:44 pm

கோவை ; கோவையில் 2 பேர் ஒரே அறையில் அமரும் விதமாக கழிவறை கட்டப்பட்டுள்ள சம்பவத்தால் கோவை மாநகராட்சி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 70வது வார்டான ராஜீவ் காந்தி நகரில், மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒரு பொதுக்கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் விதமாக, இந்த கழிப்பறையானது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கழிவறையின் ஒரு பகுதியில் இரண்டு பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரே அறைக்குள் 2 கழிவறைகள் அருகருகே அமைக்கப்பட்டுள்ள நிலையில், கழிவறைக்கு இடையிலே கதவுகளோ அல்லது தடுப்புகளோ கட்டப்படாமல் உள்ளது.

அதாவது, 2 பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் விதமாகவும், அதுவும் கதவுகளும் இல்லாதது போன்று இருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. குறுக்கே சுவரும், கதவும் இல்லாமல் கட்டுப்பட்டுள்ள இந்தக் கழிவறையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தை மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்து, உடனே அதனை சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

இதனிடையே, “இந்த கழிவறை தற்போது பயன்பாட்டில் இல்லை. விரைவில் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது,” என்று கோவை மாநகராட்சி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 535

    0

    0