6 மாதங்களாக தூர்வாரப்படாத சாக்கடை… கோவை துணை மேயரின் சொந்த வார்டில் அவலம் ; களத்தில் இறங்கிய பொதுமக்கள்…!!!

Author: Babu Lakshmanan
3 May 2024, 2:40 pm

கோவை மாநகராட்சி துணைமேயர் வெற்றிசெல்வன் வார்டில் கடந்த 6 மாதங்களாக கழிவுநீர் சாக்கடை தூர்வாராததால், தற்பொழுது பொதுமக்களே அந்த பணிகளை மேற்கொண்டு வரும் அவலம் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

திமுக அரசு ஆட்சி அமைத்த பிறகு அனைத்து துறைகளும் முடங்கி விட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, கோவையில் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருந்தாலும், அது முறைகேடான வெற்றி என்று அதிமுகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, தொடர்ந்து கோவை மாவட்டத்தை தொடர்ந்து திமுக அரசு புறக்கணித்து வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், கோயம்புத்தூர் மாநகராட்சியின் துணை மேயர் வெற்றிச்செல்வன் வார்டான 92 வது வார்டு சுகுணாபுரம் கிழக்கு, சக்தி விநாயகர் கோவில் பகுதியில் சாக்கடை கால்வாய் ஆறு மாதங்களாக தூர்வாரப்படாமல் மிக மோசமான நிலையில் உள்ளது. இப்பகுதியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: ஆவினில் ஒரு ரூபாய்க்கு மோர்… 300 யூனிட் இலவச மின்சாரம்… தமிழக அரசுக்கு டிமேண்ட் வைத்த வானதி சீனிவாசன்..!!!

இந்த வார்டின் கவுன்சிலர் என்ற முறையில் வெற்றி செல்வன் வெற்றி பெற்ற பின் ஒரு நாள் கூட இப்பகுதி மக்களிடம் வந்து கருத்துக்கள் கேட்கவோ, அடிப்படை வசதிகள் பற்றி விசாரிக்கவோ, வந்தது கிடையாது. இதுதான் திமுக அரசின் சாதனையா..? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், சாக்கடையை தூய்மை படுத்தும் பணிகளில் அப்பகுதி மக்களே ஈடுபட்டு வருகிறார்கள் அந்த வீடியோக்கள் தற்பொழுது வேகமாக சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!