தாமதமாக வரி செலுத்தினால் அபராதம் வசூலிக்காதே.. கோவை மாநகராட்சியின் முடிவுக்கு அதிமுக எதிர்ப்பு.. தரையில் அமர்ந்து தர்ணா..!!

Author: Babu Lakshmanan
29 September 2023, 1:14 pm

தாமதமாக வரி செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மாநாகராட்சி அறிவிப்பை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவை மாநகராட்சியில் அக்டோபர் 1ம் தேதிக்கு மேல் தாமதமாக வரி செலுத்துபவர்களுக்கு 1 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் நடைபெறுவதை தொடர்ந்து, மாநகராட்சியின் அந்த அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் ரமேஷ், சர்மிளா, பிரபாகரன் ஆகியோர் மேயருக்கு எதிரான பதாகையை கையில் ஏந்தி முழக்கம் எழுப்பியபடியே மாமன்றத்திற்குள் வந்தனர்.

இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் மேயர் கல்பனா அவர்களை வெளியேறுமாறு கூறினார். இதனையடுத்து வெளியேறிய கவுன்சிலர்கள் மூவரும் மாமன்ற வளாகத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “மேயர் கல்பனா ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து 300 கோடி ரூபாய் அளவிற்கு கோவை மாநகராட்சியில் வரி வசூல் செய்துள்ள நிலையில், 100 வார்டுகளிலும் எந்த ஒரு புதிய திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வருகின்றனர்.

மேலும், மேயர் கல்பனா தன்னிச்சையாக செயல்படுவதாகவும் அனஇத்து பகுதிகளிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ள சூழலில் அதிமுக மாமன்ற உறுப்பினர் ரமேஷின் வார்டில் தெரு நாய் கடித்து பாதிக்கப்பட்டவரின் புகைபுகைப்படத்தை அனுப்பியும் இதுவரை என்ன என்று கூட கேட்கவில்லை, என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, மேயருக்கு எதிரான பதாகையை கையில் ஏந்தி முழக்கங்கள் எழுப்பியபடியே மாமன்ற அரங்கிற்குள் சென்ற அதிமுக உறுப்பினர்கள் மேயர் இருக்கையின் அருகே சென்று வரி அபராதம் குறித்த தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 415

    0

    0