சவுக்கு சங்கர் வழக்கில் வேகம் காட்டும் போலீஸ்… கோவை நீதிமன்றத்தில் அதிரடியாக மனு தாக்கல்

Author: Babu Lakshmanan
6 May 2024, 2:30 pm

சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில் போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனியில் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்தனர். அவரை கோவை அழைத்து வந்து 1-வது ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மேலும் படிக்க: செந்தில்பாலாஜி விடுவிக்க வாய்ப்பு? அடுத்த முறை நிச்சயம்? நீதிமன்றம் கொடுத்த சிக்னல்!!

அவரை வருகிற 17-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கோவை சிறைக்கு கொண்டு செல்லும்போது சவுக்கு சங்கர் கோஷமிட்டபடியே போலீஸ் வேனில் சென்றார். பின்னர் நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 5 நாட்களுக்கு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டி அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 325

    0

    0