விபத்தில்லா பசுமை தீபாவளியை கொண்டாடுங்க… பொதுமக்களிடம் மாவட்ட காவல் துணை ஆணையர் விழிப்புணர்வு..!!
Author: Babu Lakshmanan22 October 2022, 7:55 pm
கோவை : விபத்தில்லா பசுமை தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி, கோவை மாவட்ட காவல் துணை ஆணையர் மதி வானன் தலைமையில் தன்னார்வகளோடு இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
கோவை லக்ஷ்மி மில் சிக்னல் பகுதியில் விபத்து மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த காவல்துறை மற்றும் பூமி தன்னார்வ அமைப்பு இணைந்து விபத்தில்லா பசுமை தீபாவளி கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி துணிப்பைகளில் விதைபந்து, இனிப்பு மற்றும் பரிசு கூப்பன்கள் வாகன ஓட்டிகளுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு மாநகர காவல் துணை ஆணையர் மதிவாணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அதுமட்டுமல்லாமல், சிக்னல் பகுதியில் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகம் எழுதப்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் கையில் பதாகை ஏந்தியபடி வாகன ஓட்டிகளுக்கு 20க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.