கோவையில் நிகழும் மாற்றம்.. புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உறுதி!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2025, 11:56 am

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமார் ஐ.ஏ.எஸ். இன்று பொறுப்பேற்றார். அவரிடம் முந்தைய ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கோப்புகளை ஒப்படைத்தார்.

பவன்குமார் ஜி கிரியப்பனவர், கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் உள்ள PES பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

இதையும் படியுங்க: அறிவாலயத்தின் செங்கலை உருவும் வரை.. அண்ணாமலை சவால்.. திமுகவின் பதில் என்ன?

2016 ஆம் ஆண்டு முதல் முயற்சியிலேயே யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தவர். அவர் இதற்கு முன் திருவள்ளூர், நாகர்கோவில், தாராபுரம், கடலூர், திருப்பூர் ஆகிய இடங்களில் பல்வேறு அரசு பதவிகளில் பணியாற்றியுள்ளார். திருப்பூர் மாநகராட்சி ஆணையராகவும், தலைமைச் செயலாளரின் அலுவலகத்தில் அரசு இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Cbe New Collector Pawan Kumar

முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தமிழ்நாடு திறந்த மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குனராக தற்போது பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

பவன்குமாரின் நியமனம் கோவையில் புதிய மாற்றங்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!