‘ரீல் அந்து போச்சு… கிளம்பு.. கிளம்பு’… காலா பட பாணியில் கவர்னரை கிண்டலடித்து போஸ்டர் ஓட்டிய கோவை திமுகவினர்..!

Author: Babu Lakshmanan
14 February 2024, 11:45 am

‘காலா’ பட பாணியில் தமிழக கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக கோவையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது கவர்னர் தனது உரையை 2 நிமிடங்களிலேயே முடித்துவிட்டு அவையை புறக்கணித்து வெளியே சென்றார். இதற்கு தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அவையில் இருந்து வெளியேறிய கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக, மணிக்கூண்டு, உக்கடம், ரயில் நிலையம், உப்பிலிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

காலா திரைப்படத்தில் ரஜினியிடம் இருந்து வில்லன் தப்பிச்செல்லும் போது ஒலிக்கும் பாடலை வைத்து, “ரீல் அந்து போச்சு.. கெளம்பு.. கெளம்பு..” என்ற வரிகளை வைத்து கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 333

    0

    0