பட்டியலினத்தவரை அவமதித்த கோவை திமுக மேயரின் கணவர்… பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாக குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan18 February 2024, 7:07 pm
பட்டியலினத்தவரை அவமதித்த கோவை திமுக மேயரின் கணவர்… பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாக குற்றச்சாட்டு!!
கோவையில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்ட திமுகபொது கூட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆள் சேர்த்துவதற்காக கோவையில் திமுகவினர் மும்முறமாக ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கோவை திமுக மேயர் கல்பனாவிற்கு அமைச்சர் தரப்பிலிருந்து சரியான மரியாதை தரவில்லை என்று எதிர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அமைச்சர்மீது கடுப்பாகிபோன திமுக மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் பணம் தருவதாக மக்களை வரவழைத்து பின்னர் தனக்கு ஆதரவாக உள்ள ஒரு சிலரை மட்டும் அழைத்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் மேயரின் கணவர் ஆனந்தகுமார் பணம் தருவதாக வரவழைத்த மக்களை நீங்கள் எல்லாம் எஸ்.சி மக்கள் இங்கேயே இருங்கள் என்று நடுதெருவில் பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளார்.
பட்டியலினத்தவரை அவமதித்த திமுக மேயரின் கணவர்!#viralpost #viralvideo #viralreels #viralshorts #shortsviral #trendingvideos #viralnews #coimbatore #kovai #stalin #dmknews #DMKFails #Codissia #AnbilMaheshPoyyamozhi pic.twitter.com/s1ANS8X9KU
— UpdateNews360Tamil (@updatenewstamil) February 18, 2024
இதனால் கடுப்பான மக்கள் அவர்களின் உள்ள குமுறல்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர் அந்த வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.