கோவையில் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் சப்ளை… 3 பேர் கைது.. 10 கிராம் மெத்த பெட்டமைன் பறிமுதல்…!!

Author: Babu Lakshmanan
2 April 2024, 12:04 pm

கோவை சுந்தராபுரம் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை செய்த கும்பல் சிக்கியது. அதிக போதையை தூண்ட பயன்படுத்தும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொழில் நகரமான கோவையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனால், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும், அதிக அளவில் இங்குள்ள கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். அவர்களில் சிலர் கல்லூரி விடுதிகளில் தங்காமல் வெளியே அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பார்கள்.

மேலும் படிக்க: நானும் தான் குடிப்பேன்… ஒரு டாஸ்மாக்கை மூட நாங்க அரசியலுக்கு வரல ; அண்ணாமலை பரபர பேச்சு!!

இந்நிலையில் சமீப காலமாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து கோவையில் போதைப் பொருள்களை விற்பனை நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைஅடுத்து, கோவையில் போதைப் பொருள் நடமாட்டத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கோவை குனியமுத்தூரை அடுத்து சுகுணாபுரம் பகுதியில் ஒரு கும்பல் போதைப் பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குனியமுத்தூர் காவல் துறையினர் மூன்று பேர் கொண்ட கும்பலை பிடித்து சோதனை நடத்தினர்.இதில் அவர்கள் போதை பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது.

காவல்துறை அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோவை ஈச்சனாரி சீனிவாச நகரை சேர்ந்த ஹரிஹரன், மனோஜ் குமார், குறிச்சி ஹவுசிங் யூனிட் சேர்ந்த மிதுஷ் என தெரிய வந்தது. அவர்களை கைது செய்து காவல்துறை அவர்களிடம் இருந்து 10 கிராம் மெத்த பெட்டமைன் என்ற போதை பொருள் ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க: சௌமியா அன்புமணி மீது தேர்தல் நடவடிக்கை பாயுமா…? பாமக நிர்வாகிகளால் வந்த வம்பு… !!!

இந்த கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுந்தராபுரத்தில் இருந்து மதுக்கரை செல்லும் சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் போதைப் பொருள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதைஅடுத்து, காவல் துறையினர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் விரைந்து சென்று அங்கு விற்பனை செய்ய வைக்கப்பட்டு இருந்த 9.4 கிராம் போதை பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோவை சுந்தராபுரம் சேர்ந்த ஷகில் என்பவரை கைது செய்தனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 307

    0

    0