‘என்னை வெளிய தூக்கிகூட போடு’… மது போதையில் கார் மீது ஏறி இளைஞர் அட்டகாசம்; வைரலாகும் வீடியோ..!

Author: Babu Lakshmanan
26 December 2022, 3:30 pm

கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இளைஞர் ஒருவர் மது போதையில் காரில் ஏறிக்கொண்டு அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கோவை சாய்பாபா காலனி நட்சத்திர விடுதி வளாகத்தில் சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் காரின் மீது ஏறி அமர்ந்து கொண்டு மது போதையில் அட்டகாசம் செய்துள்ளார். இதனை அருகில் இருந்த நண்பர்கள் இளைஞரை கீழே இறங்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால் மது போதையில் இருந்த அவர் காரில் இருந்து இறங்கமாட்டேன் என சத்தம் எழுப்பி வந்துள்ளார். பின்னர் வந்த தனியார் விடுதியின் பாதுகாவலர்கள் இளைஞரை காரில் இருந்து இறங்கும்படி தெரிவித்து சில மணி நேரங்களுக்கு பின்பு காரில் இருந்து இறக்கினர்.

இந்த நிலையில் விடுதியில் இருந்த சிலர் இளைஞரின் அட்டகாசம் செய்யும் வீடியோவை செல்போனில் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக சாய்பாபா காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Nayanthara snatched the opportunity given to Popular Actress ரஜினி கூட டான்ஸ்.. சகுனி வேலை பார்த்த நயன்தாரா : நடிகை வருத்தம்!!