கோவையில் சாலையோரம் தூங்கிகொண்டிருந்த பலூன் விற்கும் வடமாநில பெண்மணியிடம் நூறு ரூபாய் கொள்ளை அடிக்க முயன்ற நபர் பெண்ணின் கழுத்தில் பாட்டிலால் தாக்கியதில் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கோவையில் தங்கி பலூன் விற்று வருகிறார். இவருடன் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரேகா என்ற பெண்மணி கோவையில் பலூன் விற்று வருகிறார். கோவையில் இவர்களுக்கு வீடு இல்லாத நிலையில் சாலை ஓரங்கள் மற்றும் கடை வாசல்களில் படுத்து பலூன் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வடகோவை மேம்பாலம் அருகே உள்ள தனியார் ப்ளைவுட் கடையில் வாசலில் படுத்து உறங்கியுள்ளனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில் கையில் மது பாட்டிலுடன் வந்த நபர், ரேகா உறங்கி கொண்டிருந்த போது, ரேகாவின் மேல் சட்டையில் இருந்த 120 ரூபாயை திருடிச்செல்ல முயன்றுள்ளார். அப்போது திடீரென ரேகா விழித்துக்கொண்ட நிலையில், தனது கையிலிருந்த மது பாட்டிலால் ரேகாவின் கழுத்தில் தாக்கியதில் ரேகா கூச்சலிட, உடன் படுத்திருந்தவர் விழித்துக்கொண்டனர்.
இதனையடுத்து, அங்கிருந்து தப்பி ஓட முயன்றவரை பிடித்த மனோஜ் , கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்பதும், ஹோட்டலில் சப்ளையராக வேலை செய்து வரும் ஜெகன்நாதன் மீது மேட்டுப்பாளையம், காட்டூர் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஜெகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதில் காயமடைந்த ரேகா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், ஜெகநாதன் கடை வாசலில் படுத்திருந்த ரேகாவிடம் பணத்தைத் திருட முயல்வதும் ரேகா விழித்தவுடன், கழுத்தில் பாட்டிலால் தாக்கி விட்டு தப்பி ஓடும் காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளது. மேலும் காயம் அடைந்த பெண்மணி உடன் படுத்திருந்த சிறுமி எழுந்து ஆறுதல் கூறும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.