எனக்கு பசிக்கும்ல… மளிகை கடை ஷட்டரை உடைத்து பசியாற்றிய யானை கூட்டம்..!!

Author: Babu Lakshmanan
2 May 2022, 8:39 am

கோவை : கோவை தடாகம் அருகே மளிகை கடை ஷட்டரை உடைத்து உணவு பொருட்களை யானை கூட்டம் சாப்பிட்ட சம்பவம் அங்குள்ளவர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம், பெரிய தடாகம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 7 காட்டுயானைகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி இன்று அதிகாலை தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தன. அதில், 3 யானைகள் மளிகைக்கடை ஒன்றின் ஷட்டரை உடைத்து கடையில் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை சாப்பிட்டன.

தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை ஊழியர்கள், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனிடையே, யானைகள் மளிகை கடை ஷட்டரை உடைத்து அரிசி உள்ளிட்ட பொருட்களை சாப்பிடுவதை அப்பகுதிவாசிகள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி