இந்தியாவிலேயே முதல்முறை… கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மையம் துவக்கம்!!

Author: Babu Lakshmanan
21 July 2022, 8:05 pm

நாட்டிலேயே முதன் முறையாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மையம் துவங்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் தினசரி 20க்கும் மேற்பட்ட பிரேத பரிசோதனை நடப்பதால் மிகுந்த கூட்டம், காலவிரயம் ஆகியவைகளால் மக்கள் சிரமத்துக்குள்ளாகி இருந்தனர். குறிப்பாக கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அதிகமாக பிரேத பரிசோதனைக்காக உடல்கள் வருவதால் தினந்தோறும் கூட்டமாக காணப்படும்.

மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் ரவீந்திரன் ஆகியோரின் தீவிர முயற்சியில், தற்போது கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மையம் துவக்கி உள்ளனர். இஎஸ்ஐ மறுத்துவமனையும் இந்த பணியை பகிர்ந்து கொள்வதால், கோவை நகர மக்களுக்கும், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், பல்வேறு விபத்து காரணங்களால் மரணம் ஏற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இந்த செய்தி மிகப்பெரும் உதவியாக இருக்கிறது பொதுமக்கள் தகவலாக தெரிவிக்கின்றனர்.

மேலும், கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரசவ வார்டு எப்பொழுதும் கூட்டமாகவே காணப்படுவதாகவும்,பிரேத பரிசோதனை மையம் போலவே குழந்தைகள் பிரசவத்திற்கு குழந்தைகள் வார்டு ஒன்றை இஎஸ்ஐ மருத்துவமனையிலும் துவங்க வேண்டும் எனவும், இதனால் இஎஸ்ஐ தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என பொதுமக்கள் தகவல் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 740

    0

    0