‘அட ஷவர் வசதியும் இருக்கா..?’ … கோவை வந்த சதாப்தி ரயிலில் ஒழுகும் மழைநீர் ; விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!

Author: Babu Lakshmanan
13 May 2024, 6:08 pm
Quick Share

சென்னையில் இருந்து கோவை வந்த சதாப்தி ரயிலில் மழை வெள்ளம் மேற்கூரையில் இருந்து அதிக அளவில் கசிந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸில் உள்ள 2 அடுக்கு ஏசி பெட்டியில் பயணிகள் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது, பெய்த கனமழையில் ரயிலின் மேற்கூரை வழியாக ஏசி பெட்டிக்குள் மழைநீர் கொட்டியது. இதனால், அங்கிருந்த பயணிகள் தூங்க முடியாமல் உட்கார்ந்தே பயணித்தனர்.

மேலும் படிக்க: நண்பனின் மனைவியுடன் உல்லாசம்… திடீரென என்ட்ரி கொடுத்த கணவன் ; கொலையில் முடிந்த கள்ளக்காதல்!!!

இதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும், மதியம் 2:30 மணிக்கு கோவை ரயில் நிலையம் சென்றடைய வேண்டிய இந்த ரயில் மாலை 4:15 மணிக்கு கோவை வந்தடைந்தது.

இரண்டு முப்பது மணிக்கு ரயில் வந்தடையும் என தனியார் வாகன ஓட்டிகளும், ரயில் பயணிகளின் உறவினர்களும் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தனர். வயதான பயணிகள் சரியான நேரத்திற்கு மதிய உணவு எடுத்துக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.

Views: - 210

0

0