போலி நகைகளை அடகு வைத்து நூதன மோசடி… ஊழியரை பலிகடாவாக்க நினைத்த நகை கடை உரிமையாளர்… போலீசார் விசாரணை..!!
Author: Babu Lakshmanan29 July 2022, 11:47 am
கோவை : போலி நகைகளை கடையில் வேலை செய்யும் நபர் மூலம் அடகு வைக்க முயன்ற பலே கில்லாடி நகை கடை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சாய்பாபா காலனி என் எஸ் ஆர் சாலையில் அமைந்திருக்கும் தனியார் வங்கிக்கு ராமி ரெட்டி என்பவர் நகைகளை அடகு வைக்க ஆபரணங்களுடன் சென்றிருக்கின்றார். அப்போது வங்கி ஊழியர்கள் நகைகளை பெற்று எடை போட்டு பார்த்திருக்கின்றனர். அதன் எடை 301 கிராம் என கணக்கிட்டு தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், நகைகளைபார்க்க வித்யாசமாக இருப்பதனை உணர்ந்த வங்கி அதிகாரிகள் அதன் தரத்தை பார்த்திருக்கின்றனர். அப்போது அந்த நபர் கொண்டு வந்த நகை போலியான நகை என்று தெரிந்து கொண்ட நிலையில், உடனடியாக சாய்பாபா காலனி போலீஸுக்கு தகவல் தந்திருக்கின்றனர்.
விரைந்து வந்த போலீஸ் ராமிரெட்டியை பிடித்து விசாரித்திருக்கின்றனர். விசாரணையில் ராமி ரெட்டி, விக்னேஷ் என்பவரின் நகை கடையில் வேலை பார்க்கும் நபர் என்பதும், விக்னேஷே போலி நகைகளை தந்து ராமிக்கு தெரியாமலே நகைகளை அடகு வைக்க சொன்னதும் காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் போலிஸ் 420, 120 பிரிவினில் வழக்கு பந்திந்து ராமியை கைது செய்திருக்கின்றனர். தலைமறைவாக உள்ள விக்னேசுக்கு சாய்பாபா காவல் ஆய்வாளர் தமிழரசன் தலைமையிலான தனிப்படை போலிஸ் வலை வீசி மாநகர் முழுவது தேடிவருகின்றனர். போலி நகைகளை அடகு வைக்க கடையில் வேலை செய்யும் ஊழியரை பலிகடாவாக்கிய முதலாளியை பிடிக்க காவல்துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.