போலி டெலிகால் சென்டர்.. 6 ஆயிரம் பேரின் ஆவணங்கள் சிக்கியது எப்படி..? கோவையில் இளைஞர் கைது..!!

Author: Babu Lakshmanan
17 February 2023, 1:41 pm

கோவை : கோயம்புத்தூரில் போலி டெலிகால் சென்டர் நடத்திய இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 6 ஆயிரம் வாடிக்கையாளர் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.

கோயம்புத்தூர் ஆவாரம்பாளையம் இளங்கோ நகர் கிழக்கு வீதியில் வசிப்பவர் யுவராஜ பாண்டியன். இவர் கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- கோவையில் டி.எஸ்.பேங் கிங் சோலியூசன் என்ற நிறுவனம் நடத்தி வரும் தினேஷ் (25) எனக்கு அறிமுகம் ஆனார். இந்நிலையில், எனக்கு அவர் இணைய வழி மூலம் வங்கி கடன் வாங்கி தருவதாக தெரிவித்தார். இதையடுத்து, அவர் கேட்டதால் எனது ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் ஒ.டி.பி.விவரங் களை அவரிடம் கொடுத்தேன்.

இந்நிலையில், எனக்கு தெரியாமல் எனது பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளார். மேலும், அந்த வங்கி கணக்கு மூலம் ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் கடனை எனது பெயரில் பெற்று என்னிடம் தராமல் அதனை மோசடி செய்து விட்டார். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர். மேலும் விசாரணையில் அவர் போலியாக டெலிகால் சென்டர் வைத்து நடத்தி வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து 6 ஆயிரம் வாடிக்கையாளர் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள், டெலிகால் செண்டர் நடத்த பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட் டர், 8 செல்போன்கள், 26 சிம் கார்டுகள், 11 பான் கார்டுகள். 12 ஆதார் கார்டுகள் உள்ளிட் டவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் தினேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!