சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் பிரபல பிரியாணி கடை… நடவடிக்கை எடுக்குமா கோவை மாநகராட்சி?

Author: Babu Lakshmanan
25 April 2024, 8:42 am

சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் கோவையில் உள்ள பிரபல பிரியாணி கடை மீது கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா..? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கோவை காந்திபுரம் 11வது வீதியில் செயல்பட்டு வருகிறது எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடை. அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக சலுகை விலை மூலம் பிரியாணி வழங்கி வருகின்றனர். இதனால் அங்கு அதிக அளவில் கூட்டம் வருகிறது.

மேலும் படிக்க: வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு… திமுக நிர்வாகிக்கு தொடர்பு ; டிடிவி தினகரன் பரபர குற்றச்சாட்டு..!!!!

இந்நிலையில் நாள்தோறும் அங்கு கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் அதிக அளவில் சேகரித்து கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அந்த சாலையில் கடை அருகே மூட்டை மூட்டையாக இறைச்சி கழிவுகளை சேகரித்து வைத்து உள்ளனர். அந்த வழியில் துர்நாற்றம் வீசி வருவதால் அந்த சாலையை கடந்து செல்லும் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் ஏற்பட்டு உள்ளது. நடந்து செல்லும் பாதசாரிகள் துணியால் மூக்கை மூடிக்கொண்டு செல்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, இது போன்று சாலையோர கடைகளில் நடந்தால் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று அபராதம் விதித்து நடவடிக்கை எடுப்பார்கள்.

ஆனால் பிரபல பிரியாணி கடை என்பதால் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக அப்பகுதியில் அந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 237

    0

    0