பெற்ற மகனை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை.. குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்..

Author: Babu Lakshmanan
8 June 2022, 11:18 am

பொள்ளாச்சி அருகே பெற்ற மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த அப்பாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியபுரம் பிரிவு சக்தி நகரில் குடியிருந்து வந்தவர் கார்த்தி கண்ணன். இவர் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி, அதிக குடிப்பழக்கம் காரணமாக மனைவி அவரை விட்டு விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்டார்.

இந்த நிலையில், கார்த்திக் கண்ணன் அதிக குடிபோதையில், தந்தை சர்க்கரை தங்கத்துடன் தகராறு செய்து, சட்டையை பிடித்து அடிக்க முற்பட்டுள்ளார். அப்போது, கார்த்திக் கண்ணன் கழுத்தில் போட்டிருந்த துண்டை, சக்கரை தங்கம் பிடித்து முறுக்கி கார்த்திக் கண்ணனை அடித்து பெட்ரூமில் படுக்க வைத்துள்ளார்.

மயக்க நிலையில் பெட்ரூமில் படுத்திருந்த கார்த்திக் கண்ணன் பேச்சு மூச்சுயின்றி இருந்ததால், கார் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கார்த்தி கண்ணன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்கு கார்த்திக் கண்ணனின் உடல் வைக்கபட்டுள்ளது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வந்த கோட்டூர் காவல்துறையினர் சக்கரை தங்கத்தை, கோட்டூர் காவல் நிலைய போலீசார், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Revanth Reddy on Pushpa 2ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
  • Views: - 825

    0

    0