முன்னாள் அமைச்சர் காமராஜின் 2வது மகன் வீட்டிலும் ரெய்டு… கோவையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..!!

Author: Babu Lakshmanan
8 July 2022, 12:20 pm

முன்னாள் அமைச்சர் காமராஜின் இரண்டாவது மகன் இன்பன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் க்கு தொடர்புடைய
49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக கோவை சவுரிபாளையம் பிரிவு- உடையாம்பாளையம் சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜின் இண்டாவது மகன் டாக்டர் இன்பன் வசிக்கும் ராயல் ஸ்கைலைன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்பன் கோவையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக இளம் மருத்துவராக பணிபுரிந்து வருவதும், ஸ்ரீ வாசுதேவபெருமாள் ஹெல்த் கேர் என்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி