கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார். இவர் மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்து இருந்தார்.
அதில் அவர் செல்போனுக்கு ஆன்லைனில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற தகவல் வந்ததாகவும், இதனை நம்பி அவர் அதில் குறிப்பிட்டு இருந்த செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
இதனை தொடர்ந்து லாபத்துடன் முதலீடு செய்வது தொடர்பான வீடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்தனர். மேலும் தங்களுக்கு பணம் அனுப்பினால் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறினர்.
இதனை நம்பி பல்வேறு தவணையாக ரூபாய் 34 லட்சம் அனுப்பி உள்ளார். லாபத் தொகை குறித்து கேட்ட போது பணம் முதிர்வு அடைவதாக தெரிவித்தனர்.
பின்னர் லாபத் தொகையையும், பணத்தையும் திரும்பி கேட்ட போது தராமல் மோசடி செய்து விட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுத்து அவர் பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்.
இந்த புகார் அடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் செல்போன் எண்கள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தகவலின் அடிப்படையில் துடியலூரை சேர்ந்த தனசேகரன், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவி சந்துரு ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இவர்கள் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான இருவரிடம் இருந்து பல்வேறு வங்கிகளின் நூற்றுக் கணக்கான காசோலை புத்தகங்கள், கிரெடிட் கார்டுகள், ஏ.டி.எம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பங்குச் சந்தையில் லாபம் பெற்று தருவதாக கூறி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 152 பேரிடம் இதுபோன்று கோடிக் கணக்கில் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சிவராமன் விநாயகா எண்டர்பிரைசஸ் மற்றும் விஜயா பார்மா என்ற பெயரில் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.…
கங்குவா தோல்வி சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த “கங்குவா” திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம்…
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி உடனே அமைச்சராக பதவியேற்றார். மின்துறை மற்றும் மதுவிலக்கு…
படுதோல்வி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது.…
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் லியோ. திரிஷா, மிஷ்கின் சஞ்சய் தத், அர்ஜூன் உட்பட பலர்…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திர மாநில சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேவஸ்தானம்…
This website uses cookies.