அரை நிர்வாணமாக 5 நாட்கள் தரையில் படுக்க வைக்கப்பட்ட நோயாளி ; கோவை அரசு மருத்துவமனையில் அவலம்..!!!

Author: Babu Lakshmanan
29 December 2023, 5:51 pm

கோவை அரசு மருத்துவமனையில் 5 நாட்கள் நோயாளியை தரையில் படுக்க வைக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 7000க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனையில் விரிவாக்க கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனையின் எம்.எம் 2 வார்டு பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவரை கடந்த ஐந்து நாட்களாக தரையில் படுக்க வைத்துள்ளனர். அவர் வயிற்று வலியால் துடித்து அலறிக் கொண்டே இருந்தார். ஆனால் அவரை மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என யாரும் கண்டு கொள்ளவில்லை என அந்த வார்டில் உள்ள மற்ற நோயாளிகளின் உடன் இருப்பவர்கள் தகவலாக கூறுகின்றனர்.

https://player.vimeo.com/video/898548266?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு வந்த ஒருவர் இந்த காட்சிகளை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ அரசு மருத்துவமனையின் முதல்வர் நிர்மலாவுக்கு அவர்களுக்கு அனுப்பப்பட்டதாக தெரிகின்றது. இதனை பார்த்த அவர் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார் தற்பொழுது இந்த காட்சி வைரலாகி பரவி வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ