வளர்ப்பு நாய் கடித்து 10 வயது சிறுமி காயம் ; கோவையில் அதிர்ச்சி… நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

Author: Babu Lakshmanan
24 May 2024, 2:54 pm

சூலூர் அருகே சிறுமியை வளர்ப்பு நாய் கடித்த சம்பவத்தில் நாயின் உரிமையாளர் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன் குமார் என்பவரது மகள் அக்ஷயா கீர்த்தி. 5ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி அக்ஷயா கீர்த்தி, சம்பவத்தன்று மாலை அவரது வீட்டின் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் கட்டப்படாமல் இருந்த வளர்ப்பு நாய் ஆக்ரோஷமாக குரைத்தபடி சிறுமியை நோக்கி ஓடி வந்துள்ளது.

மேலும் படிக்க: குடிபோதையில் தவறி விழுந்த சகோதரர்கள்… உதவிய ஊர்க்காவலர்கள் மீது தாக்குதல் ; வீடியோ வைரலானதால் வந்த வில்லங்கம்..!!

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி நாயிடமிருந்து தப்பித்துக் கொள்ள தப்பி ஓடியுள்ளார். சிறுமி தவறி கீழே விழுந்து விட, அவர் மீது பாய்ந்த நாய் கழுத்து,தோள்பட்டை காது என 5க்கும் மேற்பட்ட இடங்களில் கடித்து குதறியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கோவை அரசு மருத்துவ மனையில் சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது தொடர்பாக சிறுமியின் தந்தை மோகன் குமார் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்‌.

புகாரின் பேரில் நாயின் உரிமையாளர் தனபால் என்பவர் மீது போலீசார், விலங்குகளால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி கொடுங்காயம் விளைவித்தல் (289), கவனக்குறைவாக அசட்டு துணிச்சலுடன் மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் (337), ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ