கோவை ; கருமத்தம்பட்டி அருகே சேலத்தில் இருந்து கோவை வந்த அரசுப் பேருந்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் இருந்து பயணிகளை ஏற்றி கோவை நோக்கி பயணித்த அரசு பேருந்து கருமத்தம்பட்டி தெக்கலூர் எலச்சிபாளையம் பகுதி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியதையடுத்து, ஓட்டுனர் பேருந்தை ஓரமாக நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, பயணிகள் அனைவரும் பேருத்தில் இருந்து இறங்கிய நிலையில், புகை கிளம்பிய பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்து மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரியத் துவங்கியது. தீயணைப்புதுறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த சூலூர் தீயணைப்புதுறையினர் தீயை கட்டுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் கொளுந்து விட்டு எரிந்த தீயில் பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த தீ விபத்தால் சிறிது நேரம் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
புகை கிளம்பியதும் சாதுர்தமாக வாகனத்தை நிறுத்தி பயணிகளை ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயணிகளை இறக்கி விட்டதால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தென்காசி அருகே தனது 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்து…
நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாகவும், 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கதாநாயகியாகவும் வலம் வருகிறார். ரஜினி, கமல்,…
சென்னையில் இன்று (மார்ச் 6) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 20…
தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தேமுதிக பாராட்டிய நிலையில், அதிமுக உடனான கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி…
பாலிவுட்டில் எதார்த்தம் இல்லை எனக் கூறியுள்ள அனுராக் காஷ்யப், விரைவில் மும்பையை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மும்பை: இது…
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
This website uses cookies.