கோவை போத்தனூர் பகுதியில் தோண்டப்பட்டு சரியாக மூடப்படதாக சாலையில் சிக்கிய அரசு பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலை பராமரிப்பு பணிகள், குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை போத்தனூர் பகுதி ரயில்வே மண்டபம் அருகில் குழாய்கள் பதிப்பதற்காக சாலை தோண்டப்பட்டுள்ளது.
தோண்டப்பட்ட சாலை சரிவர மண்ணை கொண்டு மூடாமல் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவ்வழியாக போத்தனூரில் இருந்து துடியலூர் செல்லும் எண் 4 அரசு பேருந்து சரியாக மூடப்படாமல் இருந்த குழியில் சிக்கியது. பேருந்தின் முன்புறத்தின் ஒரு சக்கரம் அரைவாசிக்கும் மேல் சிக்கி நின்றது. இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு வேறு பேருந்திற்கு மாற்றி விடப்பட்டனர். பின்னர், பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு பேருந்து குழியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து குழியில் இருந்து வெளியில் எடுத்தவுடன் காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.
சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு…
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
This website uses cookies.