அரசு கலைக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று முதல் தொடக்கம் ; பூக்கள் கொடுத்து வரவேற்ற சீனியர்கள்…!!

Author: Babu Lakshmanan
3 July 2023, 10:45 am

கோவை ;கோவை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கியதை தொடர்ந்து, சீனியர் மாணவர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.

தமிழகத்தில் இன்று முதல் அரசு கலை கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்குகின்றன. அதன்படி கோவையிலும் அரசு மருத்துவமனை அருகில் உள்ள அரசு கலைக்கல்லூரி, தொண்டாமுத்தூர் அரசு கலை கல்லூரி, புலியகுளம் அரசு கலை கல்லூரி ஆகியவற்றில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டது.

இந்நிலையில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள அரசு கல்லூரிக்கு முதல் நாள் வருகை புரிந்த மாணவர்களுக்கு, சீனியர் மாணவர்கள் ரோஜாப் பூ, சந்தனம், பன்னீர் தெளித்து வரவேற்பு அளித்தனர்.

இக்கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டில் 1626 இடங்களில் 1494 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் மீதமுள்ள இடங்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் இன்று முதல் 7ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…